டென்னிஸ்

23 வெறும் நம்பராக இருந்தது.. இன்று நீ சாதித்துவிட்டாய்- ஜோகோவிச்சுக்கு நடால் வாழ்த்து

Published On 2023-06-11 18:26 GMT   |   Update On 2023-06-11 18:41 GMT
  • 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.
  • 3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்.

3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.

காயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் இம்முறை பங்கேற்கவில்லை. இந்நிலையில், ஜோகோவிச்சின் வெற்றிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடால் கூறியதாவது:-

இந்த அற்புதமான சாதனைக்கு ஜோகோவிச்சுக்கு பல வாழ்த்துகள்.

23 என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்திக்க முடியாத ஒரு எண், அதை நீங்கள் சாதித்துள்ளீர்கள். இதை உங்கள் குடும்பம் மற்றும் குழுவுடன் கொண்டாடுங்கள்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News