தொழில்நுட்பம்
டச் ஐடி, சக்திவாய்ந்த பிராசஸருடன் புதிய ஐபேட் ஏர் அறிமுகம்
ஆப்பிள் நிறுவனத்தின் மேம்பட்ட ஐபேட் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்ட ஐபேட் ஏர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. ஏ14 பயோனிக் பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள நியூரல் என்ஜின் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை சீராக இயக்கும் திறன் கொண்டது.
இதன் முன்புறம் 7 எம்பி ஃபேஸ்டைம் ஹெச்டி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் புதிய ஐபேட் ஏர் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை மிக துல்லியமாக எடுக்க முடியும். இதன் டாப் பட்டனில் டச் ஐடி வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஐபேட் ஏர் 10.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, ஆல் ஸ்கிரீன் டிசைன், யுஎஸ்பி டைப் சி வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் பென்சில், மேஜிக் கீபோர்டு சாதனங்களுடன் இயக்கும் வசதி கொண்டுள்ளது. இது ஐபேட் ஒஎஸ்14 இயங்குதளம் கொண்டுள்ளது.
ஆப்பிள் புதிய ஐபேட் ஏர் மாடல் இதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபேட் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இது ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஐபேட் ஏர் விலை 599 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 44088 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.