தொழில்நுட்பச் செய்திகள்
மோட்டோரோலா

200MP கேமரா, ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட மோட்டோ ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

Published On 2022-05-24 06:27 GMT   |   Update On 2022-05-24 06:27 GMT
மோட்டோரோலா நிறுவனம் ஸ்னாப்டிபாகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட தனது ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி அப்டேட் செய்து இருக்கிறது. இந்த மாடலில் 200MP கேமரா வழங்கப்பட இருக்கிறது.


குவால்காம் நிறுவனம் கடந்த வாரம் தனது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரை அறிமுகம் செய்தது. ஃபிளாக்‌ஷிப் மாடல்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புது பிராசஸர் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக ஏராளமான நிறுவனங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டன. இந்த வரிசையில், தற்போது மோட்டோரோலா நிறுவனமும் இணைந்து இருக்கிறது. 

மோட்டோரோலா வெளியிட்டு இருக்கும் புது டீசர்களின் படி மோட்டோரோலா நிறுவனமும் புதிய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. இத்துடன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான டீசரையும் மோட்டோரோலா வெளியிட்டு இருக்கிறது. 



ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் மற்றும் 200MP பிரைமரி கேமரா கொண்ட மோட்டோரோலா ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜூலை மாத வாக்கில் அறிமுகமாகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் 200MP சாம்சங் ISOCELL HP1 சென்சார் வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் மோட்டோரோலா பிராண்டியர் 22 பெயரில் பலமுறை வெளியாகி உள்ளன.

முதற்கட்டமாக சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலா எட்ஜ் X30 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா பெயரில் மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News