தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸில் அதிரடி மாற்றம் செய்த சாம்சங் நிறுவனம்

Update: 2022-06-02 06:35 GMT
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 சிரீஸ் அதிகளவு பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோவில், சுழலும் பெசல்கள் இருக்காது என கூறப்படுகிறது. கடைசியாக வெளிவந்த சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4ல் சுழலும் பெசல்கள் இடம்பெற்று இருந்தன. இனி வரும் ஸ்மார்ட் வாட்ச்களில் தங்களது கிளாசிக் மாடலை தவிர்க்க சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். கேலக்ஸி வாட்ச் 4 சீரிசை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், கேலக்ஸி Z ஃபோல்ட் 3 வகை ஸ்மார்ட்போன்களுடன் சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதே போல் தான் தங்களது அடுத்த தயாரிப்பான கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸை இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் கேலக்ஸி Z ஃபோல்ட் 5 வகை ஸ்மார்ட்போன்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 சிரீஸ் அதிகளவு பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, 40mm மாடல் 276mAH பேட்டரி உடனும், 44mm மாடல் 397mAH பேட்டரி உடனும் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சபையர் கிளாஸ் மற்றும் டைட்டானியம் பாடி உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News