தொழில்நுட்பச் செய்திகள்
பேஸ்புக்

இந்தியாவில் புதிதாக வரவிருக்கும் இணைய பாதுகாப்பு விதிகளுக்கு கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் எதிர்ப்பு

Update: 2022-06-04 05:11 GMT
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு IAMAI எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு குறித்த உத்தரவை விமர்சித்துள்ளது.
இந்த மாத இறுதியில் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்திய இணைய பாதுகாப்பு விதிகள் "நம்பிக்கையை விட அச்சத்தின் சூழலை" உருவாக்கும், உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு அரசாங்கத்தை எச்சரித்துள்ளது, விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு ஒரு வருட தாமதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

பேஸ்புக், கூகுள் மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI), இந்த வாரம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு குறித்த உத்தரவை விமர்சித்துள்ளது.மற்ற மாற்றங்களுக்கிடையில், இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவின் (CERT) உத்தரவின்படி, தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுபோன்ற சம்பவங்களைக் கவனித்த ஆறு மணி நேரத்திற்குள் தரவு மீறல்களைப் புகாரளிக்க வேண்டும் மற்றும் ஆறு மாதங்களுக்கு ஐடி மற்றும் தகவல் தொடர்பு பதிவுகளை பராமரிக்க வேண்டும் என அந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை 72 மணிநேரமாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. சர்வதேச அளவில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT), அமேசான் மற்றும் மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) போன்ற கிளவுட் சேவை வழங்குநர்களை, நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகும், குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு தங்கள் வாடிக்கையாளர்களின் பெயர்கள் மற்றும் IP முகவரிகளைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய உத்தரவுகள் "பெரிய" பாதிப்பை ஏற்படுத்தலாம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்ப்ட்டு உள்ளது.
Tags:    

Similar News