தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங்

கிளவுட் அடிப்படையில் இயங்கும் தன்னாட்சி ரோபோக்கள் - சாம்சங்கின் அடுத்த அதிரடி

Update: 2022-06-03 09:30 GMT
முதலில் நேவியர் நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள மூன்று தளங்களில் மட்டும் சுமார் 40 ரோபோக்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளன.
கிளவுட் அடிப்படையில் இயங்கும் தன்னாட்சி ரோபோக்களுக்கான முதல் தனியார் 5ஜி வணிக நெட்வொர்க் சேவையை சாம்சங் நிறுவனம் கட்டமைத்துள்ளது. நேவியர் கிளவுட் நிறுவனத்துடன் இணைந்து தென் கொரியாவின் முதல் தனியார் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது சாம்சங் நிறுவனம். 

நேவியர் நிறுவனத்தின் புதிய இரண்டாவது தலைமையகம் மற்றும் சாம்சங்கின் நெட்வொர்க் தீர்வு மையம் ஆகிய இடங்களில் இந்த கிளவுட் அடிப்படையிலான தன்னாட்சி மொபைல் ரோபோக்கள் இந்த மாதம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த புதிய சேவையானது, சியோலில் உள்ள நேவியரின் தலைமையகம் முழுவதும் பயணிக்க உள்ளது. அங்கு, பேக்கேஜ் டெலிவரி, காபி டெலிவரி மற்றும் ஊழியர்களுக்கு மதிய உணவு பெட்டி விநியோகம் ஆகியவற்றை வழங்க இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.1784 என்ற எண்ணை அழைத்தால் ரோபோவின் உதவி கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முதலில் நேவியர் நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள மூன்று தளங்களில் மட்டும் சுமார் 40 ரோபோக்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள், 36-மாடிகள் கொண்ட வானளாவிய கட்டிடத்தில் நூற்றுக்கணக்கான ரோபோக்களை பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டு உள்ளனர்.

அனைத்து ரோபோக்களும் கிளவுட் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளன, அவை தனித்தனியாக செயல்படும் வண்ணம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரோபோக்கள் அனைத்தும் சாம்சங்கின் 5ஜி நெட்வொர்க் மூலம் இயங்க உள்ளன. இதன்மூலம் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் ரோபோக்களை இயக்க முடியும் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News