தொழில்நுட்பச் செய்திகள்
ஓபோ K10 5ஜி ஸ்மார்ட்போன்

ஓபோ K10 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Update: 2022-06-04 04:27 GMT
அதிக அளவு பேட்டரி திறன் கொண்ட மெலிதான 5ஜி ஸ்மார்ட்போனாக ஒபோ K10 5ஜி இருக்கும் என்று ஓபோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓபோ K10 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வருகிற ஜூன் 8 ஆம் தேதி வெளியிட உள்ளதாக ஓபோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட K10 இன் 4ஜி மாடல் முதல் 15 நாட்களில் 1,00,000 யூனிட்கள் விற்பனை ஆனதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட K10 5ஜி மாடலிலிருந்து இது வேறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இது மிகவும் மெலிதான வடிவமைப்பு மற்றும் ஸ்ட்ரெய்ட் எட்ஜ் டிசைன் ஆகியவற்றை கொண்டது. மேலும் பின்புறத்தில் கைரேகை மற்றும் கீறல்-எதிர்ப்பு திறன் கொண்ட பின்புற வடிவமைப்பை இந்த ஃபோன் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதிக அளவு பேட்டரி திறன் கொண்ட மெலிதான 5ஜி ஸ்மார்ட்போனாக ஒபோ K10 5ஜி இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.6.56″HD+ IPS LCD திரை, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி யுஎஃப்எஸ் 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், டூயல் எல்இடி ப்ளாஷ், 8 மெகாபிக்சல் முன் கேமரா, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், 3.5 மிமீ இயர்போன் ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 7.9 மிமீ தடிமன், 190 கிராம் எடை, 33W வேகமான சார்ஜிங்குடன் கூடிய 5000mAh பேட்டரி ஆகியவை இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றிருக்கும். 
Tags:    

Similar News