தொழில்நுட்பச் செய்திகள்
ஒன்பிளஸ்

2022 ஆண்டில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடைசி ஃபிளாக்‌ஷிப் போன் விவரம் லீக்கானது

Published On 2022-06-02 09:00 GMT   |   Update On 2022-06-02 09:00 GMT
விரைவில் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா என்கிற மாடலை ஒன்பிளஸ் வெளியிடும் என கூறப்பட்டு வந்தது. ஒன்பிளஸ் 10T 5ஜி மாடலை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.



ஒன்பிளஸ் நிறுவனத்துக்கு 2022ம் ஆண்டு பிசியான ஆண்டாக இருந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு அந்த நிறுவனம் தொடர்சசியாக போன்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. இதுவரை ஒன்பிளஸ் 10 ப்ரோ, 10R ரேஸிங் எடிசன், நார்டு 2T, நார்டு CE 2 லைட் ஆகிய மாடல்கள் இந்த ஆண்டு இதுவரை வெளியிடப்பட்டு உள்ளன.

அடுத்ததாக அந்நிறுவனம் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா என்கிற மாடலை வெளியிடும் என கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலாக ஒன்பிளஸ் 10T 5ஜி மாடலை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு வெளியாகும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடைசி ஃபிளாக்‌ஷிப் போனாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.



ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இந்த போன் செயல்திறனில் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் கேமராக்களைப் பொறுத்தவரை எந்தவித மாற்றமும் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப் மற்றும் 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்துடன் LDRR5 ரேம், UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். உடன் வரலாம். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த போன் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி திறனுடன் இந்த போன் இருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News