தொழில்நுட்பம்
கூகுள்

பென்ச்மார்க் சோதனையில் அசத்திய டென்சர் சிப்செட்

Published On 2021-10-25 14:29 GMT   |   Update On 2021-10-25 14:29 GMT
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் டென்சர் சிப்செட் பென்ச்மார்க் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.


கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை டென்சர் சிப்செட் உடன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. புதிய டென்சர் சிப் விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது இதன் பென்ச்மார்க் விவரங்கள் வெளியாகி உள்ளது.

ரெடிட் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவலில், டென்சர் சிப் ஜிபியு பென்ச்மார்க் புள்ளிகள் இடம்பெற்று இருக்கின்றன. பிக்சல் 6 மாடல் வைல்டு லைப் டெஸ்டில் 6666 புள்ளிகளை நொடிக்கு 39 பிரேம் வேகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறது. வைல்டு லைப் எக்ஸ்டிரீம் டெஸ்டில் நொடிக்கு 12.8 பிரேம் வேகத்தில் 2028 புள்ளிகளை வெளிப்படுத்தி இருக்கிறது. 


 
டென்சர் சிப் கொண்ட பிக்சல் 6 2129 லூப் ஸ்கோர், 56 சதவீத ஸ்டேபிலிட்டியில் 1193 லூப் ஸ்கோர் பெற்று இருக்கிறது. இது மற்ற பிளாக்‌ஷிப் பிராசஸர்களான ஸ்னாப்டிராகன் 888, எக்சைனோஸ் 2100, ஹூவாய் கிரின் 9000 உடன் ஒப்பிடும் போது அதிகம் ஆகும். பென்ச்மார்க் பரிசோதனையின்படி பிக்சல் 6 டென்சர் சிப் சிறந்த ஆண்ட்ராய்டு பிளாக்‌ஷிப் சிப்செட்களில் ஒன்றாக இருக்கிறது.
Tags:    

Similar News