தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா

45 வாட் சார்ஜிங் கொண்டு உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

Published On 2021-10-25 08:14 GMT   |   Update On 2021-10-25 08:14 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


சாம்சங் நிறுவனத்தின் 2022 பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 45 வாட் சார்ஜிங் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் முந்தைய பிளாக்‌ஷிப் மாடல்களில் அதிகபட்சம் 25 வாட் சார்ஜிங் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், அடுத்த ஆண்டு இந்த நிலையை மாற்ற சாம்சங் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் 45 வாட் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக இதே தகவல் சீன வலைதளத்திலும் இடம்பெற்று இருந்தது. இத்துடன் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 



இந்த மாடலில் உள்ள 45 வாட் சார்ஜிங் ஸ்மார்ட்போனினை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 35 நிமிடங்கள் ஆகும். முந்தைய தகவல்களின்படி சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் 2கே அமோலெட் டிஸ்ப்ளே, 108 எம்.பி. பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

Tags:    

Similar News