தொழில்நுட்பம்
ரெட்மி வாட்ச் 2 டீசர்

அமோலெட் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரெட்மி வாட்ச் 2

Update: 2021-10-21 14:46 GMT
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் ரெட்மி வாட்ச் 2 பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.


ரெட்மி வாட்ச் 2 மாடல் அக்டோபர் 28 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகமாகிறது. ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன்களுடன் புதிய ரெட்மி வாட்ச் மாடலும் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் டீசரையும் சியோமி வெளியிட்டு உள்ளது.

டீசரின் படி ரெட்மி வாட்ச் 2 அமோலெட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முந்தைய ரெட்மி வாட்ச் 1.4 இன்ச் எல்.சி.டி. பேனல் கொண்டிருந்தது. ரெட்மி வாட்ச் 2 எலிகண்ட் பிளாக், ஸ்பேஸ் புளூ மற்றும் ஐவரி என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.ரெட்மி வாட்ச் 2 பிட்னஸ் சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஓ.2 சென்சார், ஜி.பி.எஸ்., பல்வேறு ஸ்போர்ட் மோட்கள், ஸ்லீப் மாணிட்டரிங், வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News