தொழில்நுட்பம்
நத்திங்

சத்தமின்றி புது ஸ்மார்ட்போன் உருவாக்கும் நத்திங்

Published On 2021-10-16 04:22 GMT   |   Update On 2021-10-16 04:22 GMT
நத்திங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய சாதனம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.


லண்டனை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்தது. அறிமுகமான இரண்டு மாதங்களில் இந்த இயர்பட்ஸ் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் நத்திங் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. நத்திங் நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்ல் பெய் எசென்ஷியல் நிறுவன காப்புரிமைகளை நத்திங் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். 



அதன்படி எசென்ஷியல் காப்புரிமைகளை கொண்டு நத்திங் ஸ்மார்ட்போன் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தெரிகிறது. சில தினங்களுக்கு முன் குவால்காம் நிறுவன சிப்செட்களை தனது புதிய சாதனங்களில் பயன்படுத்த இருப்பதாக நத்திங் அறிவித்தது.

ஸ்மார்ட்போன் மட்டுமின்றி பவர் 1 பெயரில் பவர் பேங்க் ஒன்றை நத்திங் உருவாக்கி வருவதாகவும், வரும் வாரங்களில் இது அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News