தொழில்நுட்பம்
ரியல்மி ஜிடி நியோ 2

அசத்தல் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2021-10-13 08:25 GMT   |   Update On 2021-10-13 08:25 GMT
ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கிறது.


ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.62 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் அல்ட்ரா பாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் கொண்டிருக்கிறது.



புதிய ரியல்மி ஜிடி நியோ 2 மாடல் நியோ கிரீன், நியோ புளூ மற்றும் நியோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 31,999 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 35,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எனினும், பண்டிகை கால விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் முறையே ரூ. 24,999 மற்றும் ரூ. 28,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News