தொழில்நுட்பம்
சியோமி

ஸ்னாப்டிராகன் 898 பிராசஸருடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்

Published On 2021-10-13 07:07 GMT   |   Update On 2021-10-13 07:07 GMT
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.


சியோமி நிறுவனம் புதிய சிவி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இது சியோமியின் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது சியோமியின் எம்.ஐ. 12 சீரிஸ் மாடல்கள் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

புதிய சியோமி எம்.ஐ. 12 மாடல் முந்தைய ஸ்மார்ட்போன்களை விட எடை குறைவாக இருக்கும் என்றும் இதன் அம்சங்கள் முன்பை விட மேம்பட்டு இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர் கொண்டிருக்கும். இந்த பிராசஸர் கொண்டு வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 



மற்ற அம்சங்களை பொருத்தவரை 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, மிக மெல்லிய பாடி, வளைந்த டிஸ்ப்ளே, அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, 50 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News