தொழில்நுட்பம்
ட்விட்டர்

இனி அப்படி செய்ய வேண்டாம் - புது அம்சம் அறிமுகம் செய்த ட்விட்டர்

Update: 2021-10-13 06:26 GMT
ட்விட்டர் சமூக வலைதளத்தில் கடந்த மாதம் சோதனை செய்யப்பட்ட புதிய அம்சம் தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது.


ட்விட்டரில் பாளோவர்களை பிளாக் செய்யாமல் அவர்களை நீக்கும் புதிய அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வசதி ட்விட்டர் வெப் வெர்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த மாதம் இதே அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அம்சம் வழங்கும் முன், பிளாக் செய்யப்பட்ட நபர் உங்களின் ப்ரோபைலை பார்க்க முற்பட்டால் நீங்கள் அவரை பிளாக் செய்துள்ளீர்கள் என ட்விட்டர் தெரிவிக்கும். ஆனால் புதிய அம்சம் கொண்டு பாளோவரை நீக்கினால், யார் உங்களின் ட்வீட்களை பார்க்கின்றனர் என்பதை நினைத்து பாதுகாப்பாக உணரலாம்.புதிய அம்சத்தை ட்விட்டரில் குறிப்பிட்ட நபரின் ப்ரோபைலில் மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை க்ளிக் செய்து ரிமூவ் திஸ் பாளோவர் (remove this follower) எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். புதிய அம்சம் கொண்டு ஒருவரை பிளாக் செய்யாமல், அவரிடம் இருந்து ட்விட்டரில் விலகி இருக்க முடியும். 
Tags:    

Similar News