தொழில்நுட்பம்
ஹெச்.பி. குரோம்புக்

ஏ.எம்.டி. பிராசஸருடன் வெளியான முதல் ஹெச்.பி. குரோம்புக்

Update: 2021-10-12 11:07 GMT
ஹெச்.பி. நிறுவனத்தின் புதிய குரோம்புக் மாடலில் முதல்முறையாக ஏ.எம்.டி. பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.


உலகளவில் குரோம் ஓ.எஸ். கொண்ட குரோம்புக் மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ். மாடல்களைவிட இதன் விலை குறைவாக இருப்பதே இத்தகைய வரவேற்புக்கு காரணம் ஆகும்.

பெரும்பாலான குரோம்புக் மாடல்கள் இன்டெல் பிராசஸர்களையே கொண்டிருக்கின்றன. ஹெச்.பி. நிறுவனம் தற்போது ஏ.எம்.டி. பிராசஸர் கொண்ட குரோம்புக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல் ஹெச்.பி. எக்ஸ்360 14ஏ என அழைக்கப்படுகிறது. இந்த மாடலில் கூகுள் அசிஸ்டண்ட், ஒரு வருடத்திற்கான கூகுள் ஒன் சந்தா, 14 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது. புதிய ஹெச்.பி. எக்ஸ்360 14ஏ மாடல் விலை ரூ. 32,999 ஆகும்.
Tags:    

Similar News