தொழில்நுட்பம்
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7

வினியோக திட்டத்தில் திடீர் மாற்றம் செய்த ஆப்பிள் - காரணம் இதுதான்

Update: 2021-10-11 10:02 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 வினியோக தேதிகள் மாற்றப்படுகின்றன.


ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடலுக்கான முன்பதிவை சில தினங்களுக்கு முன் துவங்கியது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 வினியோகம் சில வாரங்கள் தாமதமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக வினியோகம் தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 வினியோக தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சில விலை உயர்ந்த மாடல்கள் தற்போது கிடைக்கவில்லை “currently unavailable” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 899 டாலர்கள் விலை கொண்ட சாதனங்களுக்கு இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடல்கள் பிளாக் டைட்டானியம் மற்றும் சிலிகான் பேண்ட் கொண்டிருக்கின்றன.புதிய வாட்ச் மாடல்கள் மட்டுமின்றி ஐபோன் 13 சீரிஸ் மாடல்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. சில மாடல்களின் வினியோகம் நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலக்கட்டத்திற்கு முன் உற்பத்தி குறைகளை ஆப்பிள் சரிசெய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Tags:    

Similar News