தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி ஏ12

இணையத்தில் லீக் ஆன சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

Update: 2021-10-11 04:26 GMT
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டியுடன் உருவாகி வருகிறது.


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஏ சீரிசில் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் கடந்த சில வாரங்களாக இணையத்தில் வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கேலக்ஸி ஏ13 5ஜி பெறும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் ரென்டர்களும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. ரென்டர்களின் படி சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பாடி, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 290 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 22 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News