தொழில்நுட்பம்
ரெட்மி ஸ்மார்ட்போன்

120 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டு உருவாகும் ரெட்மி நோட் 11

Update: 2021-10-10 04:15 GMT
சியோமியின் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், புதிய ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 11 எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 10 மாடல் குறைந்த விலையில் பல்வேறு தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதேபோன்று புதிய ரெட்மி நோட் மாடலும் அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.முந்தைய தகவல்களின்படி ரெட்மி நோட் 11 மாடல் புல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கட்-அவுட்டில் செல்பி கேமரா, பின்புற பேனல் கிளாஸ் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்பட்டது. இத்துடன் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் செவ்வக கேமரா மாட்யூலுக்கு மாற்றாக சதுரங்க வடிவ கேமரா பம்ப் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News