தொழில்நுட்பம்
ஐபோன் எஸ்.இ.

இணையத்தில் லீக் ஆன ஐபோன் எஸ்.இ.3 விவரங்கள்

Update: 2021-10-09 07:27 GMT
ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி புதிய ஐபோன் எஸ்.இ. மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ.3 பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் இந்த மாடலின் கான்செப்ட் ரென்டர்கள் வெளியாகின. அதில் புதிய ஐபோன் முந்தைய எஸ்.இ. மாடலில் இருந்த சேசிஸ் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

இத்துடன் ஐபோன் எஸ்.இ.3 மாடலில் 5ஜி கனெக்டிவிட்டி, ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ்60 5ஜி மோடெம் வழங்கப்படலாம். மற்ற அம்சங்களை பொருத்தவரை 4.7 இன்ச் டிஸ்ப்ளே, டச் ஐடி சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.ஐபோன் எஸ்.இ. 3 தோற்றம் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஐபோன் வெளியீட்டு விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடல் வரும் மாதங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

Tags:    

Similar News