தொழில்நுட்பம்
அமேசான்

மீண்டும் அறிவிக்கப்பட்ட அமேசான் சலுகை - இனி இப்படியும் செய்யலாம்

Update: 2021-10-09 06:22 GMT
அமேசான் பிரைம் மாதாந்திர சலுகை சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் அறிமுகமாகி இருக்கிறது.


அமேசான் தனது பிரைம் சேவையில் மிகவும் பிரபலான ரூ. 129 மாதாந்திர சலுகையை மீண்டும் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக இந்த சலுகை நீக்கப்பட்டது. 

இதையடுத்து அமேசான் பிரைம் மூன்று மாதங்கள் மற்றும் வருடாந்திர சலுகைகளை மட்டுமே வழங்கிவந்தது. தற்போது அமேசான் பிரைம் ரூ. 129 மாதாந்திர சலுகை மீண்டும் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதனை பெற அனைத்து மின்னணு பரிவர்த்தனை முறைகளையும் பயன்படுத்த முடியாது.முன்பை போன்று இல்லாமல், அமேசான் பிரைம் ரூ. 129 சலுகையை கிரெடிட் கார்டு அல்லது தேர்வு செய்யப்பட்ட டெபிட் கார்டு கொண்டு ரீசார்ஜ் செய்ய முடியும். ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வங்கிகள் மூலமாகவே ரூ. 129 சலுகையை பெற முடியும் என அமேசான் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News