தொழில்நுட்பம்
ஐபோன் 11

ஐபோனுக்கு அதிரடி சலுகை வழங்கும் அமேசான்

Update: 2021-10-09 04:23 GMT
அமேசான் வலைதளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஐபோன் 11 மாடலுக்கு அதிரடி சலுகை வழங்கப்படுகிறது.


அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் மாபெரும் பண்டிகை கால சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. பல்வேறு பொருட்களுக்கும் இந்த விற்பனையில் விலை குறைப்பு, தள்ளுபடி, வங்கி சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அந்த வரிசையில், ஸ்மார்ட்போன்களுக்கும் அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஐபோன் 12 மினி மாடல் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. அந்த வரிசையில் தற்போது ஐபோன் 11 மாடலின் 64ஜிபி விலை ரூ. 39,999 என்றும் 128 ஜிபி ரூ. 44,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.இத்துடன் ஐபோனிற்கு வங்கி சார்ந்த சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்வோருக்கு ரூ. 13,650 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதையடுத்து ஐபோன் 11 64 ஜிபி மாடலை ரூ. 26,349-க்கும் 128 ஜிபி மாடலை ரூ. 31,349-க்கும் வாங்க முடியும்.
Tags:    

Similar News