தொழில்நுட்பம்
மோட்டோ இ40

விரைவில் இந்தியா வரும் மோட்டோ இ40

Update: 2021-10-08 07:08 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய இ40 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.


மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 12 ஆம் தேதி அறிமுகமாகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கான டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.

இதன் பின்புறம் கைரேகை சென்சார், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் டி700 ஆக்டா கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 48 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இதன் விலை 149 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News