தொழில்நுட்பம்
விவோ வி21 5ஜி

அடுத்த வாரம் இந்தியா வரும் புதிய விவோ 5ஜி ஸ்மார்ட்போன்

Update: 2021-10-07 05:54 GMT
விவோ நிறுவனத்தின் வி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் புதிய நிறத்தில் இந்தியாவில் அறிமுகமாகிறது.


விவோ நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் விவோ வி21 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் பிரீமியம் மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இது சன்செட் டேசில், ஆர்க்டிக் வைட் மற்றும் டஸ்க் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 29,990 ஆகும்.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் அக்டோபர் 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இம்முறை இந்த ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய நிறம் தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது. விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 29,990 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 32,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News