தொழில்நுட்பம்
மோட்டோரோலா

48 எம்பி பிரைமரி கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்

Update: 2021-10-07 04:18 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய இ சீரிஸ் ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.


மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அந்நிறுவனம் டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரில் ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.

எனினும், இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 13 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது கிரே மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.அம்சங்களை பொருத்தவரை 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி700 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 48 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News