தொழில்நுட்பம்
போல்ட் இயர்பட்ஸ்

குறைந்த விலையில் ஏ.என்.சி. அம்சம் கொண்ட இயர்பட்ஸ் அறிமுகம்

Update: 2021-10-04 10:13 GMT
ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்ட போல்ட் ஆடியோ நிறுவனத்தின் முதல் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.


போல்ட் ஆடியோ நிறுவனம் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், நீண்ட நேர பேட்டரி பேக்கப் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

புதிய சோல்பாட்ஸ் மாடலில் 10 மில்லிமீட்டர் டிரைவர்கள், ப்ளூடூத் 5, ஆக்டிவ் நாய்ஸ் பில்ட்டரிங் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இயர்பட்களில் டச்பேட் உள்ளது. இதை கொண்டு வால்யூம், பாடல்களை மாற்றுவது போன்ற அம்சங்களை இயக்கலாம்.இந்த இயர்பட்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. போல்ட் ஆடியோ ஏர்பேஸ் சோல்பாட்ஸ் மாடல் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2499 ஆகும். விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News