தொழில்நுட்பம்
ஐபோன் 12 மினி

ஐபோனுக்கு ரூ. 20 ஆயிரம் விலை குறைப்பு - ப்ளிப்கார்ட் அதிரடி

Update: 2021-10-04 04:15 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் முன்னணி ஐபோன் மாடல் விலை ப்ளிப்கார்ட் தளத்தில் குறைக்கப்பட்டு இருக்கிறது.


ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் 2021 சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கியது. 

சிறப்பு விற்பனையின் அங்கமாக ஐபோன் 12 மினி மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஐபோன் 12 மினி 64 ஜிபி மாடல் தற்போது ரூ. 38,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்தியாவில் ஐபோன் 12 மினி ரூ. 59,900 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.சிறப்பு விற்பனையில் ஐபோன் 12 மினி 128 ஜிபி விலை ரூ. 43,999 என்றும் 256 ஜிபி விலை ரூ. 53,999 என்றும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அனைத்து வேரியண்ட்களுக்கும் சிறப்பு எக்சேன்ஜ் சலுகையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

விலை குறைப்பு காரணமாக தற்போது மிக குறைந்த விலையில் கிடைக்கும் 5ஜி ஐபோன் மாடலாக ஐபோன் 12 மினி இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 மினி தற்போது ரூ. 69,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News