தொழில்நுட்பம்
மோட்டோ டேப் ஜி20

8 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மோட்டோ டேப்லெட் அறிமுகம்

Update: 2021-09-30 10:58 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது. இதில் 8 இன்ச் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஹீலியோ பி22டி பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் ஆண்ட்ராய்டு 11, கிட்ஸ் மோட், மெட்டல் போன்ற வடிவமைப்பு, மோனோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 5 எம்பி ஆட்டோபோக்கஸ் பிரைமரி கேமரா, 2 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.கனெக்டிவிட்டிக்கு 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி, 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் கொண்டிருக்கிறது. மோட்டோ டேப் ஜி20 பிளாட்டினம் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10,999 என துவங்குகிறது. இதன் முன்பதிவு அக்டோபர் 2 ஆம் தேதி துவங்குகிறது.
Tags:    

Similar News