தொழில்நுட்பம்
நோக்கியா பியுர்புக் எஸ்14

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான நோக்கியா பியுர்புக் எஸ்14 லேப்டாப்

Update: 2021-09-29 10:55 GMT
நோக்கியா நிறுவனத்தின் புதிய லேப்டாப் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


நோக்கியா பியுர்புக் எஸ்14 லேப்டாப் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கும் புதிய லேப்டாப் 14 இன்ச் புல் ஹெச்.டி. ஸ்கிரீன், இன்டெல் ஐ5 11-ம் தலைமுறை குவாட்கோர் பிராசஸர், 8 ஜிபி அல்லது 16 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்.எஸ்.டி. கொண்டிருக்கிறது.

இத்துடன் டால்பி அட்மோஸ் வசதி, விண்டோஸ் 11, ஹெச்.டி. ஐ.ஆர். வெப்கேமரா, விண்டோஸ் ஹெல்லோ பேஸ் அன்லாக், பேக்லிட் கீபோர்டு, பிரெசிஷன் டச்பேட் மற்றும் ஜெஸ்ட்யூர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வைபை 6, ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், யு.எஸ்.பி. டைப் ஏ போர்ட், ஹெச்.டி.எம்.ஐ. உள்ளது.இந்தியாவில் புதிய நோக்கியா பியுர்புக் எஸ்14 விலை ரூ. 56,990 என துவங்குகிறது. இதன் விற்பனை அக்டோபர் 3 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. 
Tags:    

Similar News