தொழில்நுட்பம்
சியோமி 11 லைட் என்.இ. 5ஜி

ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்

Update: 2021-09-29 10:11 GMT
சியோமி நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மாரட்போன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.


சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் சியோமி 11 லைட் என்.இ. 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.55 இன்ச் அமோலெட் டாட் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், மொத்தத்தில் 12 5ஜி பேண்ட்களுக்கான ஆதரவு வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக சியோமி அறிவித்து உள்ளது. மிக-மெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கும் சியோமி 11 லைட் என்.இ. 5ஜி மாடலில் புதிய பி.சி.பி. டிசைன், 1.88 எம்.எம். அளவில் மெல்லிய பெசல்கள் உள்ளன.புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா, 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. சியோமி 11 லைட் என்.இ. 5ஜி மாடல் 4250 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

சியோமி 11 லைட் என்.இ. 5ஜி மாடல் டைமண்ட் டேசில், டஸ்கேனி கோரல், ஜாஸ் புளூ மற்றும் வினைல் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 26,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 28,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 2 ஆம் தேதி துவங்குகிறது.
Tags:    

Similar News