தொழில்நுட்பம்
ஐகூ இசட்5 5ஜி

பட்ஜெட் விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

Update: 2021-09-27 11:30 GMT
ஐகூ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.


ஐகூ நிறுவனத்தின் புதிய இசட்5 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. ஐகூ இசட்5 5ஜி அம்சங்கள்

- 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர்
- அட்ரினோ 642எல் GPU
- 8 ஜிபி /12 ஜிபி ரேம்
- 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 12
- டூயல் சிம்
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி எஸ்.ஏ./ என்.எஸ்.ஏ., டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்

ஐகூ இசட்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் டான் மற்றும் மிஸ்டிக் ஸ்பேஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 23,990 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 26,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் அக்டோபர் 3 ஆம் தேதி துவங்குகிறது.
Tags:    

Similar News