தொழில்நுட்பம்
மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ

அடுத்த வாரம் இந்தியா வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்

Update: 2021-09-25 04:22 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் கொண்டிருக்கிறது.


மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகமாகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஆமோலெட் டிஸ்ப்ளே, 108 எம்பி பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 11 5ஜி பேண்ட்களுக்கான வசதி வழங்கப்படுகிறது.இத்துடன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் டர்போ சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஐ.பி.52 சான்று, வைபை 6, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., இரண்டு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி +256 ஜிபி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்தில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இரிடிசண்ட் கிளவுட் மற்றும் மிட்நைட் ஸ்கை என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News