தொழில்நுட்பம்
மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ டீசர் வெளியீடு

Update: 2021-09-21 11:39 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கிறது.


மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து எட்ஜ் 20 ப்ரோ மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தது. அந்த வரிசையில், தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 108 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம்.புதிய ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மட்டுமின்றி மோட்டோ டேப் 8 மாடலும் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
Tags:    

Similar News