தொழில்நுட்பம்
வி

நொடிக்கு 3.5 ஜிபி வேகம் - 5ஜி சோதனையில் அசத்தும் வி

Update: 2021-09-20 10:12 GMT
வி நிறுவனம் மத்திய அரசின் ஸ்பெக்ட்ரத்தில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனையை துவங்கி உள்ளது.


வி நிறுவனம் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனையை துவங்கியது. 5ஜி சோதனையில் வி நிறுவனம் அதிவேக இணைய சேவையை பதிவு செய்தது. எம்.எம்.வேவ் ஸ்பெக்ட்ரம் பேண்டில் வி நிறுவனம் நொடிக்கு 3.7 ஜிபி வேகத்தை பதிவு செய்தது. இந்த சோதனை பூனே நகரில் நடைபெற்றது.

காந்திநகர் பகுதியில் 3.5 ஜிகாஹெர்ட்ஸ் பேண்டில் இணைய வேகம் நொடிக்கு 1.5 ஜிபியாக பதிவானது. வி நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை மத்திய அரசின் 5ஜி ஸ்பெக்ட்ரத்தில் சோதனை செய்து வருகிறது. இந்த சோதனை பூனே மற்றும் காந்திநகர் பகுதிகளில் நடைபெறுகிறது. 'எதிர்காலத்தில் இந்திய வணிகர்கள் மற்றும் நுகர்வோருக்கு உண்மையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்க அடுத்த தலைமுறை 5ஜி தொழில்நுட்பத்தை சோதனை செய்து வருகிறோம்,' என வி நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரி ஜக்பிர் சிங் தெரிவித்தார்.
Tags:    

Similar News