தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி

சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Update: 2021-09-20 04:15 GMT
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்ய இருந்த 5ஜி ஸ்மார்ட்போன் இந்த தேதியில் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 19 ஆம் தேதி அறிமுகமாகும் என அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட தேதியில் அறிமுகமாகவில்லை. 

தற்போது இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 28 ஆம் தேதி அறிமுகமாகும் என அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய கேலக்ஸி எம்52 5ஜி மாடல் 7.2 எம்.எம். அளவில் உருவாகி இருக்கிறது. இந்த மாடல் குறைந்த எடையில், அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கும் என அமேசான் டீசரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி மாடலில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், மூன்று கேமரா சென்சார்கள், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.1 ஓ.எஸ்., யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது.

Tags:    

Similar News