தொழில்நுட்பம்
ஐகூ

விரைவில் இந்தியா வரும் ஐகூ இசட்5

Update: 2021-09-19 03:10 GMT
ஐகூ நிறுவனத்தின் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன் டீசர் அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
ஐகூ இசட்5 ஸ்மார்ட்போனிற்கான டீசர் அமேசான் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன் 'விரைவில் வெளியீடு' என அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அந்த வகையில் ஐகூ இசட்5 இந்திய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படலாம். புதிய ஐகூ இசட்5 அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.சமீபத்தில் ஐகூ இசட்5 ப்ரோ விவரங்கள் கூகுள் பிளே கன்சோல் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் எல்.பி.டி.டி.ஆர்.5 ரேம், யு.எப்.எஸ். 3.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News