தொழில்நுட்பம்
ரியல்மி பேண்ட் 2 டீசர்

அடுத்த வாரம் இந்தியா வரும் ரியல்மி பேண்ட் 2

Update: 2021-09-17 09:53 GMT
ரியல்மி நிறுவனம் புதிய பேண்ட் 2 மற்றும் ஸ்மார்ட் டிவி நியோ 2 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.


ரியல்மி நிறுவனம் தனது பேண்ட் 2 மாடல் இந்தியாவில் செப்டம்பர் 24 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இதே நிகழ்வில் ரியல்மி நார்சோ 50 சீரிஸ் மாடல்களும் அறிமுகமாகிறது. ரியல்மி பேண்ட் 6 வெளிப்புற தோற்றம் ஹானர் பேண்ட் 6 / ஹூவாய் பேண்ட் 6 போன்றே காட்சியளிக்கிறது.

இதில் 1.4 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், ஐ.பி.68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, அதிக ஸ்போர்ட் மோட்கள், 18 எம்.எம். மாற்றக்கூடிய ரிஸ்ட் ஸ்டிராப்கள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரியல்மி பேண்ட் விலை ரூ. 1499 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. புதிய ரியல்மி பேண்ட் விலை ரூ. 2500 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.பிட்னஸ் பேண்ட் 2 மட்டுமின்றி ரியல்மி ஸ்மார்ட் டிவி நியோ 32 இன்ச் மாடல் இதே தினத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் டிஸ்ப்ளே, 20 வாட் டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News