தொழில்நுட்பம்
ரியல்மி 8ஐ

50 எம்பி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்

Update: 2021-09-09 09:51 GMT
ரியல்மி நிறுவனம் புதிய 8ஐ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.


ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரியல்மி 7ஐ மாடலின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும். 

புதிய ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அண்ட் வைட் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ளது.

இந்தியாவில் புதிய ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஸ்பேஸ் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 15,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்குகிறது.
Tags:    

Similar News