தொழில்நுட்பம்
சியோமி ஸ்மார்ட்போன்

விரைவில் இந்தியா வரும் சியோமி 5ஜி ஸ்மார்ட்போன்

Update: 2021-09-09 04:21 GMT
சியோமி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


சியோமி நிறுவனம் விரைவில் 11 லைட் 5ஜி என்.இ. ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. என்.இ. என்பது நியூ எடிஷனை குறிக்கும் என்றும் கூறப்படுகிறது. புதிய சியோமி 11 லைட் 5ஜி என்.இ. மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதன்படி புதிய சியோமி 5ஜி ஸ்மார்ட்போன் 159 கிராம் எடை கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 20 எம்பி செல்பி கேமரா, 64 எம்பி பிரைமரி கேமராவுடன் 8 எம்பி + 5 எம்பி கேமரா சென்சார்கள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது.இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 6.5 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 12 ஜிபி ரேம் மற்றும் 4150 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் பிளாக், வைட், புளூ, சியான், கிரீன், எல்லோ, ஆரஞ்சு, ரெட் மற்றும் பர்பில் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News