தொழில்நுட்பம்
ஆப்பிள்

2021 ஐபோன் வெளியீட்டு தேதியை அறிவித்த ஆப்பிள்

Update: 2021-09-08 04:16 GMT
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களின் வெளியீட்டு விவரங்களை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது.


ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 14 ஆம் தேதி சிறப்பு நிகழ்வு நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் ஐபோன் 13 சீரிஸ், புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மினி மாடலில் 5.4 இன்ச் ஸ்கிரீன், ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் 6.1 இன்ச் ஸ்கிரீன், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மேம்பட்ட 7பி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்படலாம்.புதிய ஐபோன்களில் அதிவேக 5ஜி சேவை வழங்கும் ஏ15 சிப்செட், 120 ஹெர்ட்ஸ் ப்ரோ-மோஷன் டிஸ்ப்ளே, சிறப்பான வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல்கள் 41 எம்.எம். மற்றும் 45 எம்.எம். அளவுகளில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் எஸ்7 சிப் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News