தொழில்நுட்பம்
பி.எஸ்.என்.எல்.

ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை

Published On 2021-09-05 09:15 IST   |   Update On 2021-09-05 09:15:00 IST
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் சமீபத்தில் தனது விசேஷ சலுகைகளின் வேலிடிட்டியை குறைத்தது. தற்போது ரூ. 1498 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை பி.எஸ்.என்.எல். அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

ரூ. 1498 மட்டுமின்றி ரூ. 2399 விலையில் மற்றொரு சலுகையை பி.எஸ்.என்.எல். அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் 90 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். ரூ. 1,498 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 2 ஜிபி டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் நொடிக்கு 40 கிலோபைட் ஆக குறைக்கப்படும்.


முதற்கட்டமாக சென்னையில் அறிவிக்கப்பட்ட இந்த சலுகை தற்போது நாட்டின் அனைத்து வட்டாரங்களிலும் கிடைக்கிறது. இந்த சலுகையை பெற 123 என்ற எண்ணிற்கு வாடிக்கையாளர்கள் "STVDATA1498" என குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

பி.எஸ்.என்.எல். ரூ. 2399 சலுகை 425 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது.

Similar News