தொழில்நுட்பம்
ஐபோன்

ஐபோன் 13 சீரிஸ் இந்த தேதியில் வெளியாகும் என தகவல்

Published On 2021-08-30 07:09 GMT   |   Update On 2021-08-30 07:09 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.


கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் வழக்கத்தை விட தாமதமாகவே அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு முந்தைய வழக்கத்திலேயே ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன்களின் வெளியீடு குறித்து ஆப்பிள் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. 

முன்னதாக ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 13 சீரிஸ் செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.



புதிய ஐபோன்களுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல்களும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றின் விலை கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் பூமியின் சுற்றுப்பாதை அருகில் உள்ள செயறக்கைக்கோள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் இதுபோன்ற தொழில்நுட்பம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக ஐபோன் 13 சீரிஸ் இருக்கும். இதை கொண்டு வாய்ஸ் கால் மற்றும் குறுந்தகவல்களை செல்லுலார் கனெக்டிவிட்டி இன்றி மேற்கொள்ள முடியும். 
Tags:    

Similar News