தொழில்நுட்பம்
சியோமி எம்.ஐ. டிவி. 5எக்ஸ்

எம்.ஐ. டி.வி. 5எக்ஸ் ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்த சியோமி

Update: 2021-08-26 10:47 GMT
சியோமி நிறுவனம் எம்.ஐ. டி.வி. 5எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட் டி.வி.க்களை அசத்தல் சலுகைகளுடன் விற்பனை செய்ய இருக்கிறது.


சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய எம்.ஐ. டி.வி. 5எக்ஸ் ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் டி.வி. சீரிஸ் 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. மூன்று மாடல்களிலும் 4கே டிஸ்ப்ளே, விவிட் பிக்சர் என்ஜின் 2, டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 10 பிளஸ் / ஹெச்.டி.ஆர். 10 என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

புதிய ஸ்மார்ட் டி.வி.க்கள் குவாட்கோர் மீடியாடெக் எம்.டி.9611 பிராசஸர், மாலி ஜி52 எம்.பி.2 ஜி.பி.யு. கிராபிக்ஸ், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 மற்றும் பேட்ச்வால் 4, ஹேண்ட்ஸ்-பிரீ கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கின்றன.இந்தியாவில் புதிய எம்.ஐ. டி.வி. 5எக்ஸ் 43 இன்ச் விலை ரூ. 31,999, 50 இன்ச் மாடல் ரூ. 41,999 மற்றும் 55 இன்ச் மாடல் விலை ரூ. 47,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இவை ப்ளிப்கார்ட், எம்.ஐ. ஹோம், எம்.ஐ. ஸ்டூடியோ, குரோமா போன்ற விற்பனை மையங்களில் செப்டம்பர் 7 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி, எளிய தவணை முறை வசதி, வட்டியில்லா மாத தவணை போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

Tags:    

Similar News