தொழில்நுட்பம்
ரெட்மி டீசர்

ரெட்மி வயர்லெஸ் இயர்பட்ஸ் டீசர் வெளியீடு

Update: 2021-08-25 10:11 GMT
ரெட்மி பிராண்டின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.


ரெட்மி நிறுவனம் செப்டம்பர் 3 ஆம் தேதி ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. தற்போது இதே தினத்தில் ரெட்மி இயர்பட்ஸ் மாடலும் அறிமுகமாகும் என ரெட்மி தெரிவித்து இருக்கிறது. 

புதிய ரெட்மி இயர்பட்ஸ் குவால்காம் பிராஸர், ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் இது அதிகபட்சம் 30 மணி நேர பிளேபேக் வழங்கும் என்றும் ரெட்மி தெரிவித்துள்ளது. இத்துடன் ஸ்பிலாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.இந்த இயர்பட்ஸ் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகமான ரெட்மி ஏர்டாட்ஸ் 3 என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த இயர்போனின் விலை ரூ. 3 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படலாம்.

Tags:    

Similar News