தொழில்நுட்பம்
ரெட்மி டீசர்

ரெட்மி 10 பிரைம் இந்திய வெளியீட்டு விவரம்

Update: 2021-08-23 11:33 GMT
சியோமியின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை வெளியிட்டு வருகிறது. புது ரெட்மி ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக வலைப்பக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகமாகிறது.

புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர், அடாப்டிவ் டிஸ்ப்ளே என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. தற்போதைய தகவல்களின்படி இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 10 பிரைம் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளம் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் முன்னதாக ரெட்மி நோட் 10 மாடல் விலை மாற்றப்பட்டது. அதன்படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,499 என மாறி இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி ரெட்மி 10 பிரைம் விலை ரூ. 10 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News