தொழில்நுட்பம்
மைக்ரோமேக்ஸ் இன் 2பி

சத்தமின்றி ஸ்மார்ட்போன் விலையை மாற்றிய மைக்ரோமேக்ஸ்

Published On 2021-08-21 12:37 IST   |   Update On 2021-08-21 12:37:00 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இன் 2பி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.


இந்திய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான மைக்ரோமேக்ஸ் தனது மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போனின் விலையை உயர்த்தி இருக்கிறது. ஜூலை மாத வாக்கில் ரூ. 7,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வு குறித்து மைக்ரோமேக்ஸ் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், இன் 2பி ஸ்மார்ட்போன்களின் புதிய விலை ப்ளிப்கார்ட் தளத்தில் மாற்றப்பட்டு இருக்கின்றன. புதிய விலை மைக்ரோமேக்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் மாற்றப்பட்டுவிட்டது. 



மைக்ரோமேக்ஸ் இன் 2பி புதிய விலை விவரம்

விலை உயர்வை தொடர்ந்து மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி மாடல் விலை ரூ. 8,499 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோமேக்ஸ் இன் 2பி 6 ஜிபி மாடல் விலை ரூ. 8,999-இல் இருந்து தற்போது ரூ. 9,449 என மாறி இருக்கிறது. இரு மாடல்களின் விலையும் தற்போது ரூ. 500 உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

Similar News