தொழில்நுட்பம்
பி.எஸ்.என்.எல்.

தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை

Update: 2021-08-21 05:20 GMT
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.


பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 1,498 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதிவேக டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 40 கே.பி.-யாக குறைக்கப்பட்டு விடும்.

ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் புதிய ரூ. 1,498 சலுகை நாட்டின் அனைத்து வட்டாரங்களிலும் கிடைக்கும். புதிய பிரீபெயிட் சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர எஸ்.எம்.எஸ். மற்றும் வாய்ஸ் கால் போன்ற பலன்கள் எதுவும் இந்த சலுகையில் வழங்கப்படவில்லை. இதற்கான வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.புதிய பி.எஸ்.என்.எல். சலுகையை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். ஏர்டெல் நிறுவனமும் ரூ. 1,498 விலையில் பிரீபெயிட் சலுகையை வழங்கி வருகிறது. இதில் மொத்தம் 24 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், 3600 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News