தொழில்நுட்பம்
நத்திங் இயர் 1

முதல் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்ற நத்திங் இயர் 1

Update: 2021-08-17 11:01 GMT
நத்திங் நிறுவனத்தின் முதல் வயர்லெஸ் இயர்பட்ஸ் அடுத்த விற்பனை தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.


நத்திங் நிறுவனத்தின் இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வந்தது. ரூ. 5999 விலையில் அறிமுகமான நத்திங் இயர் 1 இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டது.இந்திய சந்தையில் நத்திங் இயர் 1 ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டது. இன்றைய விற்பனை துவங்கிய 2 நிமிடங்களில் சுமார் 4800-க்கும் அதிக யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக நத்திங் தெரிவித்துள்ளது. ப்ளிப்கார்ட் விற்பனையில் நத்திங் இயர் 1 மாடலுக்கு கேஷ்பேக், தள்ளுபடி, வங்கி சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. முதல் விற்பனை நிறைவுற்ற நிலையில், நத்திங் இயர் 1 மாடலுக்கான அடுத்த விற்பனை தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Tags:    

Similar News