தொழில்நுட்பம்
ரெட்மி நோட் 10 ப்ரோ

ரெட்மி நோட் 10 சீரிசின் பேஸ் வேரியண்ட் விற்பனையை நிறுத்திய சியோமி

Update: 2021-08-16 11:32 GMT
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ப்ரோ, நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் பேஸ் வேரியண்ட் அந்நிறுவன வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.


சியோமியின் ரெட்மி நோட் 10 சீரிசில் - ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ரெட்மி நோட் 10எஸ் மற்றும் ரெட்மி நோட் 10டி போன்ற மாடல்களை சியோமி அறிமுகம் செய்தது.

ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் 6 ஜிபி + 64 ஜிபி விலை முறையே ரூ. 15,999 மற்றும் ரூ. 18,999 ஆகும். தற்போது சியோமி நிறுவனம் 6 ஜிபி + 64 ஜிபி மாடல்களின் விற்பனையை நிறுத்தி இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களின் பேஸ் வேரியண்ட் சியோமி வலைதளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டன.தற்போது ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி + 128 ஜிபி ரூ. 17,999, 8 ஜிபி + 128 ஜிபி ரூ. 18,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 19,999, 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 21,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
Tags:    

Similar News