தொழில்நுட்பம்
கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி, கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி

ரூ. 84,999 துவக்க விலையில் சாம்சங் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

Update: 2021-08-16 10:55 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய விற்பனை விவரம் வெளியிடப்பட்டன.


சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் இந்திய விலையை அறிவித்து உள்ளது. முன்னதாக கேலக்ஸி அன்பேக்டு விழாவில் இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போன் பேண்டம் பிளாக் மற்றும் கிரீம் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி ஸ்மார்ட்போன் பேண்டம் பிளாக், பேண்டம் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 24 ஆம் தேதியும், விற்பனை செப்டம்பர் 10 ஆம் தேதியும் துவங்க இருக்கிறது.

விலை விவரம்

கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி (8 ஜிபி + 128 ஜிபி) ரூ. 84,999
கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி (8 ஜிபி + 256 ஜிபி) ரூ. 88,999
கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி (12 ஜிபி + 256 ஜிபி) ரூ. 1,49,999
கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி (12 ஜிபி + 512 ஜிபி) ரூ. 1,57,999அறிமுக சலுகைகள்

சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 7 ஆயிரம் அப்கிரேடு வவுச்சர் அல்லது ரூ. 7 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

இத்துடன் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மாடலை முன்பதிவு செய்யும் போது ரூ. 7999 மதிப்புள்ள ஒரு வருடத்திற்கான சாம்சங் கேர் பிளஸ் சந்தா வழங்கப்படுகிறது. கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி மாடலை முன்பதிவு செய்வோருக்குரூ. 4,799 மதி்ப்புள்ள சாம்சங் கேர் பிளஸ் சந்தா வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News